உங்களது கைபேசியை டிவி, டிவிடி, ஏசி போன்ற பல்வேறு மின்சாதனங்களுக்கு எப்படி ரிமோட்டாக பயன்படுத்துவது என்று அறிவோம். உங்களது சாதாரண ரிமோட்டுகள் எப்படி செயல்படுகின்றன? தொலைக்காட்சிப்பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், இருந்த இரண்டு, மூன்று சேனல்களை பார்ப்பதற்கு குவிந்த கூட்டத்தையும், சேனல்களை மாற்றுவதற்கு பட்டப்பாட்டையும் பலரால் மறக்கவே முடியாது. "வைஃபையை பயன்படுத்தி வெடிகுண்டை கண்டுபிடிக்கலாம்" - அசத்தும் புதிய தொழில்நுட்பம் அலைபேசியில் குரல் மூலம் தமிழில் டைப் செய்வது எப்படி? உங்களது கைபேசியின் மூலம் ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்க முடியுமா? அதையெல்லாம் மாற்றி, நீங்கள் உட்கார்ந்த இடத்திலேயே டிவி, ஏசி போன்ற பல்வேறு மின்சாதனங்களை மாற்றுவதற்கு உதவும் ரிமோட்டுகள் இயங்குவதற்கு இன்ஃப்ராரெட் (IR) என்னும் அகச்சிவப்பு கதிர்கள், ரேடியோ ஃப்ரீகுவன்சி (RF) என்னும் ரேடியோ அலைகள் ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் காரணமாக உள்ளன. இன்ஃப்ராரெட் (IR) பெரும்பாலான மின்சாதங்களில் பயன்படுத்தப்படும் ரிமோட்டுகள் இன்ஃபராரெட் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. உங்களது ரிமோட்டில் அழ...